குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட கடற்கோள்களால்தான் குமரிக்கண்டம் படிப்படியாகக் கடலில் மூழ்கியது. அதனாலே தமிழரின் முதற் சங்கமும் இடைச்சங்கமும் அமைந்திருந்த நிலங்கள் கடலில் அமிழ்ந்துபோயின. அதன்பின்னரே கடைச்சங்கம் தற்போதைய தமிழகத்தில் உள்ள மதுரை நகரில் நிறுவப்பட்டது.
குமரிக்கண்டத்தில்தான் பாண்டிய நாடும் வேறு பல நாடுகளும் இருந்தன என்றும். குமரிக் கண்டத்தில் இருந்த பாண்டிய நாடு கடலில் முற்றுமுழுதாக மூழ்கியபின்னர் (அதன் எஞ்சிய பகுதிகள்தான் தற்போதைய ஈழத்தீவும் மடகாஸ்காரும் தென்கிழக்காசிய தீவுகள், மாலை தீவு போன்றவையாகும்) பாண்டிய மன்னன் சோழர் நிலத்தைக் கைப்பற்றிப் பாண்டிய நாட்டை மீண்டும் நிறுவினான் என்றும் கூறுவர் உண்டு.
அவ்வாறு இறுதிக் கடற்கோளில் தப்பி மீண்டும் பாண்டிய அரசை நிறுவிய மன்னனை மனு என்றும் அழைத்தனர். ஊழிவெள்ளத்தினின்றும் தப்பிய அவனது பேழை தங்கிய இடம் பொதிகை மலை ஆகும் என்றும் கூறுவர்.
தமிழர்களால் சாதியமைப்பு முறைப்படுத்தப்படதானால், மனு என்ற அந்தப் பாண்டிய மன்னன் பெயரினாலே அந்த சாதியமைப்பை அக்காலத்து மக்கள் வழங்கியிருப்பர். அதாவது மனு சாத்திரம் என்று கூறியிருப்பர். அந்த சாதி வகுபாடு நிர்வாகம் செய்வதற்காகத் தமிழர்களால் அமைக்கப்பட்டது. தற்போது எவ்வாறு தொழிற் துறைகள் உள்ளனவோ, அவ்வாறே அன்று தமிழர்களின் சாதியமைப்பு நிலவியது என்பதுதான் உண்மை.
மேலும், பைபிளில் உள்ள நோவா ஆர்க் என்ற கப்பல் வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பியதாகவும் அது மத்திய கிழக்காசியாவில் உள்ள ஏதோ ஒரு மலையில் கரைசேர்ந்ததாகவும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வெள்ளப்பெருக்கிற்கும் தமிழர்களின் குமரி நிலமும் (பாண்டிய நாடும்) கடற்கோளால் அழிவுற்றதற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும். அதன்படி நோவா ஆர்க் என்பது திருவிற்பாண்டியனின் பேழையாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறெனில், நோவா ஆர்க்கைப் பொதிகை மலையில்தான் தேட வேண்டும்.
http://tamilparks.50webs.com
http://www.tamilr.com/kumarikandam/index.asp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment