Saturday, December 16, 2006

முட்டம் வலைப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக அண்மைக்காலங்களில் முட்டம் திகழ்கிறது. பல திரைப்படங்களில் அழகுபட காண்பிக்கப்பட்டதும் 'கடலோரக் கவிதைகள்' படத்தின் கதைத்தளமாய் அமைந்ததுமான முட்டம் பற்றிய என் பதிவொன்றை கடல் கன்னிமூலம் மீள் அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன்.

'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' வெறும் அழகியலை விளக்கும் பதிவல்ல. மீனவ கிராமம் ஒன்றின் பல இயல்களையும் வெளிக்காட்டும் பதிவு. அந்த அழகு கிராமத்தில் என் அனுபவங்களை சுவைபட அசைபோடும் பதிவு.

கன்னியாகுமரி மாவட்டம் பற்றி இன்னும் சில தகவல்களோடும் புதிய பதிவுகளோடும் மீண்டும் சந்திப்போம்.

Friday, December 15, 2006

அறிமுகம்

உலகறிந்த குமரிமுனையில் உதித்து, வாழ்வின் சுழற்சிக்குள்ளாகி உலகின் ஏதோவொரு மூலையில் இன்று வாழ்கின்ற குமரிமண்ணின் மைந்தர்கள் தங்கள் ஆக்கங்கள் வாயிலாக இந்த மண்ணையும் அதிலுள்ள மனிதர்களையும் நினைவுகூரும் ஒரு களமாக இந்தப்பதிவு.