Wednesday, February 07, 2007

எங்கள் கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், ( Kanyakumari district ) தமிழ் நாட்டின் முப்பது மாவாட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும்.
இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறது.
இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும். 2001 - வது ஆண்டின் கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மொத்த மக்கள் தொகை 1,676,034 ஆகும். இதில் 65.27% நகர் புற மக்கள் தொகையாகும். [1] மேலும் 2006 டிசம்பர் 26 அன்று தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளை கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் நாசத்துக்கு உள்ளாக்கியது.


மும்மதங்கள் சங்கமிக்கும் தெருப்பள்ளி
முன்னோர்கள் நினைவாக வாவுபலி
வானுயர உயர்ந்து நிற்கும் மலைகளடு
கதைபேசி விளையாடும் கார்மேக முகடு

source from http://tamilparks.50webs.com/tamilpoem/kanyakumari_district.html

Saturday, December 16, 2006

முட்டம் வலைப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக அண்மைக்காலங்களில் முட்டம் திகழ்கிறது. பல திரைப்படங்களில் அழகுபட காண்பிக்கப்பட்டதும் 'கடலோரக் கவிதைகள்' படத்தின் கதைத்தளமாய் அமைந்ததுமான முட்டம் பற்றிய என் பதிவொன்றை கடல் கன்னிமூலம் மீள் அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன்.

'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' வெறும் அழகியலை விளக்கும் பதிவல்ல. மீனவ கிராமம் ஒன்றின் பல இயல்களையும் வெளிக்காட்டும் பதிவு. அந்த அழகு கிராமத்தில் என் அனுபவங்களை சுவைபட அசைபோடும் பதிவு.

கன்னியாகுமரி மாவட்டம் பற்றி இன்னும் சில தகவல்களோடும் புதிய பதிவுகளோடும் மீண்டும் சந்திப்போம்.

Friday, December 15, 2006

அறிமுகம்

உலகறிந்த குமரிமுனையில் உதித்து, வாழ்வின் சுழற்சிக்குள்ளாகி உலகின் ஏதோவொரு மூலையில் இன்று வாழ்கின்ற குமரிமண்ணின் மைந்தர்கள் தங்கள் ஆக்கங்கள் வாயிலாக இந்த மண்ணையும் அதிலுள்ள மனிதர்களையும் நினைவுகூரும் ஒரு களமாக இந்தப்பதிவு.

Wednesday, August 23, 2006

வணக்கம்

முக்கடலும் முத்தமிடும்,
முத்தமிழும் சந்தமிடும்,
முத்துத்தமிழ்க் குமரி மண்ணை,
நமது மண்ணை-
நமது மொழியால் பாடுவோம்.